சனி, 7 ஆகஸ்ட், 2010

பேஸ்புக்கின் இன்னோர் வசதி



உங்களுக்கு வேண்டாதவர்கள் எவராவது ஒன்லைனில் இருந்தால் அவர்களை மட்டும் ஓஃப் லைனிற்கு கொண்டு வர இதோ
முதலில் பேஸ்புக்கில்
எக்கவுண்ட் எடிட்டில் பிரன்ட்ஸ் ஆப்சனை தெரிவு செய்க
பின் கிரியேட் லிஸ்ட் என்ற பட்டனை கிளிக் செய்க
திரையில் தோன்றும் நண்பர்களின் பட்டியலின் மேல் மூலையில்
லிஸ்டின் பெயரை இடுக
உங்களுக்கு விரும்பிய நண்பரை தெரிவு செய்க
உங்களுக்கு ஏற்ற வகையில் பிரன்ட்ஸ் லிஸ்ட் உருவாக்குங்கள்
அனைத்து லிஸ்ட்களும் உருவாக்கியதன் பின்
ஒன்லைன் பட்டனை கிளிக் செய்யும்போது வெவ்வேறு லிஸ்ட்கள் தோன்றும்
அதில் பச்சை நிறத்தில் தோன்றும் பட்டனை கிளிக் செய்து விரும்பாதவர்களை ஓஃப் லைன் செய்துதான் பாருங்களேன்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

விண்ணில் அதிசய பந்துகள்

விண்ணில் சொக்சர் பந்துகளை போன்ற வடிவில் ஸ்பைட்ஸர் எனும் தொலைநோக்கியூடாக நாசா இரசாயன சேர்க்கை கொண்ட அழகிய வடிவங்களை கொண்ட பல பந்து போன்ற வடிவங்களை முதன்முதலில் அண்டவெளியில் கண்டுபிடித்திருக்கிறது.
இப்பந்துகள் வடிவில் கண்டுபிடிக்கப்பட்டவை காபன் மூலக்கூறுகளே.
ஆரம்ப காலங்களில் இரசயானவியலில் காபன் மூலக்கூறுகளின்
வடிவங்கள் ஆய்வுகூடங்களில் மாத்திரமே காணக்கூடியதாக இருந்தது.
முதன் முதலில் காபன் இவ்வடிவில் இருப்பதாக 25 ஆண்டுகளுக்கு முன்புதான் ஆய்வுகூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது
காபன் அணுக்களின் இந்த வடிவம் 1970 ம் ஆண்டு காலப்பகுதியில் யப்பானிய பேராசிரியர் இஜி ஒஸாவா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டாலும் 1985ம் ஆண்டு காலப்பகுதியிலேயே பரிசோதனை முழுமையாக வெற்றி கொள்ளப்பட்டது
மேலும் இது அயனக்கப்பட்டவாயு அல்லது நட்சத்திரத்தில் காணப்படும் முகில் அல்லது அழிந்துகொண்டிருக்கும் நட்சத்திரம் போன்றவற்றில் இருந்து வெளிவருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
பக்கிபோல்ஸ் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் இவற்றில் 60 காபன் அணுக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது இதில் C-70 எனும் காபன் இதற்கு மூலகாரணம் என்றும் விஞ்ஞானிகளால் கூறப்படுகிறது

இத்தகவல் மற்றவர்களுக்கும் பயனளிக்க வேண்டுமென்றால் வாக்களித்துச் செல்லுங்கள்